fbpx
Homeதலையங்கம்நல்ல முடிவு

நல்ல முடிவு

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம், காஷ்மீர் பிராந் தியத்தின் வளர்ச்சிக்காக இப்பகுதி இளைஞர்களிடம் பேசுவோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருப்பது பாராட்டி வரவேற்கத்தக்கது.

ஜம்மு – காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த 2019 ஆகஸ்டில் நீக்கப்பட்டு, ஜம்மு & காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.

அதன் பிறகு முதன்முறையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு – காஷ்மீர் பகுதிக்கு மூன்று நாள் பயணமாக வந்திருந்தார்.

ஸ்ரீ நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை அமித்ஷா தொடங்கி வைத்தார். ரூ.115 கோடியில் கட்டப்பட்டுள்ள 500 படுக்கைகள் கொண்ட அரசு மருத்துவமனையைத் திறந்து வைத்த அவர், மருத்துவக் கல்லூரிக்கும், பாராமுல்லா மாவட்டம் பெரோஸ்பூரில் கட்டப்பட்டுள்ள எக்கு பாலத்துக்கும் அடிக்கல் நாட்டினார்.

“இந்த பணி சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாயில் அமைய உள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு கடந்த 2 ஆண்டுகளில் ஜம்மு – காஷ்மீரில் 5 லட்சம் வேலைவாய்ப்புகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன.

20 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டிருக்கிறது. வரும் 2022க்குள் மொத்தம் ரூ.51,100 கோடி மதிப்பிலான முதலீடுகளை கொண்டு வந்து அதன் மூலம் இங்குள்ள இளைஞர்கள் 5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே மத்திய அரசின் நோக்கம்“ என்று அமித்ஷா கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img