சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன் நேற்று (செப்.6) ஆய்வு மேற்கொண்டார்.
தொழிற்பயிற்சி வளாகத்தில் ஒவ்வொரு ஆய்வகப் பகுதிக்கும் சென்ற அமைச்சர், வசதிகள், இயந்திர கட்டுமானங்கள் போன் றவற்றின் செயல்பாடுகளை பார் வையிட்டார். தொழிற்பயிற்ச்சி நிலையத்தில் பயிலும் மாணவ, மாணவி களுடன் உரையாடினார். அங்குள்ள கட்டமைப்புகள் குறித் தும் கேட்டறிந்தார்.பின்னர் செய் தியாளர்களிடம் அமைச்சர் கூறி யதாவது:
தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் 91-ல் இதுவரையில் 46 ஐடிஐயை பார்வையிட்டுள்ளேன். 47-வது ஐடிஐயாக சேலம் மாவட்டத்தில் இந்த அரசு தொழில் பயிற்சி நிலையத்தை ஆய்வு செய்தேன்.
ஆய்வின் நோக்கம், பயிற்சி நிலையத்தில் படிக்கின்ற இளை ஞர்களுக்கு நூற்றுக்கு நூறு சதவீதம் வேலைவாய்ப்பை பெற்று தர வேண்டும் என்பதே. இதனால், முதல்வருடைய வழி காட்டுதலின் அடிப்படையில் ஒவ்வொரு ஐடிஐ யாக சென்று ஆய்வு செய்கிறேன்.
தமிழ்நாட்டில் 36,000 இளைஞர்கள் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் பயின்று வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25 ஆயிரம் இளைஞர்கள் முதலாம் ஆண்டு பயிற்சிக்கு சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
கடந்த ஆண்டுக்கு முன்பு 41% தான் சேலத்தில் தொழில்பயிற்சி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட் டிருக்கிறது. ஆனால், தற்போது 63% ஐடிஐ படிக்கக்கூடிய மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்று தந்திருக்கிறோம்.
அரசாங்கத்தின் மூலமாக வேலைவாய்ப்பு பெறுவது ஒருபுறம் இருந்தாலும், அனை வருக்கும் உடனடியாக வேலை கொடுக்க முடியாது என்கிற காரணத்தினால், முதல்வர் தனியார் தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என்று சொல்லி, அதனடிப்படையில் இதுவரையில் 66 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி உள்ளார்.
அதன் மூலமாக 9900 இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பை பெற்றுத் தந்திருக்கிறோம். விரை விலே இந்த எண்ணிக்கை ஒரு லட்சமாக உயரும். விரைவில் அந்த ஒரு லட்சமாவது வேலை வாய்ப்பு பெறும் இளைஞருக்கு, முதல்வர் பணி ஆணை வழங்குவார்.
வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்கிற காரணத்தின் அடிப்படையிலே 71 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு தலா 31.98 கோடி ரூபாய் வழங் கப்படுகிறது. ஒவ்வொரு ஐடிஐயும், மேலை நாடுகளுக்கு இணையான தொழில்நுட்ப வசதியுடன், கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகின்றன.
புதிய கட்டி டங்களை கட்டி ரோபோடிக் ஆட்டோமேஷன் போன்ற நவீன முறையில் மாணவர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது.
தற்போது வரக்கூடிய மிகப்பெரிய நிறு வனங்களில் வேலைவாய்ப்புகளுக்கு, அவர்கள் விரும்புகிற கல்வியை கொடுத்து திறன் மேம்பாட்டு பயிற்சி கொடுத்து, வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என்பதற்காக, பயிற்சி நிலையங்களுக்கு செல்கிறேன்.
என்னென்ன குறை இருக்கிறது, அவற்றையெல்லாம் நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காக ஆய்வுகள் நடக்கின்றன என்றார் அமைச்சர் சி.வி.கணேசன்.



