தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசுப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான படிக்கும் மாணவர்களுக்கு, சிற்றுண்டி வழங்கும் திட்டம் இன்று (16ம் தேதி) தொடங்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி லூர்தம்மாள்புரம் சமையல் கூடத்தில், காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தைக் கொடி அசைத்து தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச் சர் கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



