திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் அறக்கட்டளை திட்டத்தின் கீழ் 10 மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு சட்டபூர்வ பாதுகாவலர் சான்றிதழினை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் ஜோதிலிங்கம் மற்றும் தேசிய அறக்கட்டளை தொண்டு நிறுவனத்தின் இயக்குநர் கலந்து கொண்டனர்.



