மின் இணைப்பு இல்லாத, பாசன ஆதாரமுள்ள ஆழ்துளைக் கிணறு/ திறந்த கிணறு அமைத்துள்ள விவசாயிகள் 70 சதவிகித மானியத்துடன் சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்பு செட்டுகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வே.விஷ்ணு தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசா யிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
முதலமைச்சரின் சூரிய சக்தி பம்பு செட்டுகள் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு இல்லாத பாசன ஆதாரமுள்ள விவசாயிகளுக்கு 5 முதல் 10 ஹெச்.பி. திறன் வரையிலான சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் 70 சதவிகிதம் மானியத் தில் வழங்கப்பட்டு வருகின்றன.
இத் திட்டம் 2021-22-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தமிழக அரசு 40 சதவீதம், ஒன்றிய அரசு 30 சதவீதம் மானியமாக வழங் குகின்றன.
இத்திட்டத்தின் கீழ் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு, கூடுதலாக 20 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகின்றன.
ரூ.218.177 லட்சம் ஒதுக்கீடு
2022&-23-ம் ஆண்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் 110 எண்கள் சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் ரூ.218.177 லட்சம் மானியத்தில் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் விண்ணப்பித்து சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்பு செட் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு ஆட்சியர் வே. விஷ்ணு தெரிவித்துள்ளார்.
டீசல் செலவு சேமிப்பாகிறது
சூரியசக்தி மூலம் இயங்கும் பம்பு செட் பெற்ற பயனாளி மகாராஜா தெரிவித்ததாவது: மானூர் வட்டம், செழியநல்லூர் கிராமத்தில் வசித்து வருகிறேன். சொந்தமாக 3 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் பருத்தி பயிர் தொழில் செய்து வந்தேன்.
எனது நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்றால் மோட்டார் பம்பு செட்டுக்கு மாதத்திற்கு 45 லிட்டர் டீசல் செலவாகும். அதை வாங்குவதற்கு எனது வீட்டில் இருந்து கங்கைகொண்டான் அல் லது அழகியபாண்டியபுரத்திற்கு சென்றுதான் வாங்க வேண்டும்.
வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் 70 சதவீதத்தில் சூரிய சக்தி மூலம் இயங்கும் பம்பு செட் தருவதை அறிந்தேன். அதற்கு விண்ணப்பித்த, சில நாட்களில் பம்பு செட் வழங்கினார்கள்.
எனக்கு மாதந்தோறும் டீசலுக்கு செலாவ கின்ற ரூ.5000 சேமிப்பாகிறது. அலைச்சலும் இல்லை. இத்திட்டம் எனது வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்கு உதவிகரமாக இருந்தது.
இத்திட்டத்தினை தந்த முதல்வருக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் எனது குடும்பத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று செய்தியாளர் பயணத்தின்போது தெரிவித்தார்.



