fbpx
Homeபிற செய்திகள்திருச்சியில் கருடா ஸ்கேன் நாளை திறப்பு விழா

திருச்சியில் கருடா ஸ்கேன் நாளை திறப்பு விழா

திருச்சி புத்தூர் சிந்தாமணி எதிரில் உள்ள சந்தானம் டவரில் நாளை (10ம் தேதி) 24 மணி நேரம் செயல்படும் கருடா ஸ்கேன் திறப்பு விழா நடைபெறுகிறது.

அனைத்து நவீன ஸ்கேன் வசதிகள், MRI Scan, Digital X-Ray, Ultrasound Scan, Echo, Colour Doppler ஒரே இடத்தில் நோயாளிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு திறக்கப்பட உள்ளது. MRI Scan பற்றி அனைவரும் அறிந்தது தான்.

இங்குள்ள MRI Scan ன் சிறப்பு அம்சங்கள், 20 நிமிடத்தில் ஸ்கேன் எடுத்து விடலாம். சப்தம் குறைவாக இருக்கும், 24 மணி நேரமும் இயங்கும், அவசர ஊர்தி (Ambulance) வசதி உள்ளது.

படங்கள் துல்லியமாக தெள்ளத் தெளிவாக இருக்கும். இங்குள்ள MRI Scan-ல் நரம்பியல் சம்மந்தமான புதிய தொழில் நுட்பம் உள்ளதால் அனைத்து வியா திகளையும் கண்டறிய முடியும்.

உதாரணமாக ஒருவருக்கு மூளையில் கட்டி இருந்தால் அவரை கை கால்களை ஆட்ட சொல்லியும், பேச சொல்லியும் Scan எடுக்கலாம். இதனால் அறுவை சிகிச்சை / மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் போது பாதுகாப்பாக சிகிச்சை செய்ய முடியும் மூளையின் எந்த பகுதியில் இரத்த அடைப்போ, கசிவோ ஏற்பட்டால் 15 நிமிடத்தில் கண்டறிந்து கிசிச்சை அளித்தால் விரைவாக குணமடைய முடியும்.

(MRI Perfusion Scan) தலைக்காயம் ஏற்பட்டு மூளை திரவ கசிவு ஏற்பட்டால் அதை துல்லியமாக கண்டறிவதன் மூலம் சிகிச்சை அளிக்கும் மருத்துவர் வெற்றிகரமாக செயல்படமுடியும். மூளைப்பகுதியில்TB நோய் ஏற்பட்டால் அதற்கு ஸ்பெக்ட் ரோஸ்கோபி முறையில் MRI Scanசெய்து எளிதாக கண்டறியலாம் என்ற நவீன பயன்பாடுகள் உள்ளன.


நவீன MRI Scan மூலம் தண்டுவட நோய்கள், உடலின் எந்த பகுதியில் சதை பகுதியில் ஏற்படும் பாதிப்புகள், முட்டி பகுதியில் ஏற்படும் பாதிப்புகள், வயிற்றில் கணையம், ஈரல், பித்தப்பை, பித்தக்குழாய் பகுதியில் ஏற்படும் பாதிப்பு துல்லியமாக அறியலாம்.

பெண்களுக்கு மார்பக கட்டிகள், கர்ப்பப்பை கட்டிகளில் ஏற்படும் புற்று நோய் பாதிப்புகள் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

காது, மூக்கு, தொண்டை பகுதியில் ஏற்படும் பாதிப்புகள், கட்டிகளையும் எளிதாக Diagnosis செய்ய முடியும். MRI Scan Radiation இல்லாத பாதுகாப்பான இயந்திரமாகும்.

கருடா ஸ்கேனில் இரத்தப் பரிசோதனைகள், உடல் உறுப்பு முழு பரிசோதனைகள் (Master Health Checkup) அனைத்தும் செய்யப்படும். ஸ்கேனில் 12 வருடங் கள் அனுபவம் பெற்ற நாங்கள், நோயாளிகளின் தேவைக்கேற்ப அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி உள்ளோம்.

CT Scan மூலம் வயிற்றுப்பகுதி மற்றும் உடல் பகுதியில் கட்டிகள் இருந்தால் திசு பரிசோதனை செய்யலாம். இரத்தக்குழாய் அடைப்பு மற்றும் கசிவுகள் உடலின் எந்தப் பகுதியில் ஏற்பட்டாலும் கண்டறியலாம்.

அனைவரும் ஒரே குழுவாக செயல்பட்டு நோயாளிகளை அக் கறையுடன் கவனித்து, பரிசோதனைகள் செய்து அவர்களை Report உடன் செல்லுமாறு பார்த்துக் கொள்வார்கள்.

மற்ற மருத்து வமனைகளில் இருப்பவர்களுக்கு அழைத்துவர இலவச அவசர ஊர்தி (Ambulance) வசதி 24மணி நேரமும் உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு Antenatal Scan சிறப்பு ஏற்பாடுகள் தனியாக செய்யப்பட்டுள்ளது. இதற்கு கட்டாயம் முன்பதிவு அவசியம்.

கருடா ஸ்கேன் திறப்பு விழாவை குடும்ப பெரியவர்கள் காலை 11 மணி அளவில் குத்து விளக்கு ஏற்றி திறந்து வைப்பார்கள். தேவைப்படுபவர்களுக்கு சலுகை கட்டணத்தில் ஸ்கேன் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img