fbpx
Homeபிற செய்திகள்தார்ச்சாலைப் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

தார்ச்சாலைப் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

இராஜபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செட் டியார்பட்டி பேரூ ராட்சியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 157 லட்சம் மதிப்பீட்டில் வார்டு 11,12 நாயுடு தெற்கு தெரு மற்றும் வி.ஐ.பி நகரில், வாறுகாலுடன் கூடிய தார்ச்சாலை அமைக்கும் பணியினை, கண்காணிப்புப் பொறியாளர் திருமா வளவன், எம்எல்ஏ தங்கப் பாண்டியன் ஆகியோர் பார்வையிட்டனர்.

செட்டியார்பட்டி, சேத்தூர் பேரூராட்சி பகுதிகளில் மற்றும் கிரா மப் பகுதிகளில் விரைவில் 100% தார்ச்சாலை மற்றும் பேவர்பிளாக் தளம் மூலம் சாலை வசதி மேம்படுத்தப்படும் என எம்எல்ஏ தங்கப்பாண்டியன் உறுதி அளித்தார்.

நிர்வாகப் பொறியாளர் சாய்ராஜ், உதவி நிர்வாகப் பொறியாளர் சுரேஷ்குமார், செயல் அலுவலர் சந்திரகலா, பேரூர் கழக செயலாளர் இளங்கோவன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img