நியூ கேம்ரி ஹைபிரிட் என்ற புதிய காரை டொயோட்டா கிர்லோஸ் கர் அறிமுகப்படுத்தியுள்ளது. முன்புறம் பம்பர் புதிய டிசைனுடன் வடிவமைக்கப்பட் டுள்ளதுடன், அலுமினிய சக்கரங்கள், அதிகவசதி கொண்ட அம்சங்கள் ஆகியன கேம்ரி ஹைபிரிட் வகை காரை தனித்துவம் வாய்ந்ததாக மாற்றியுள்ளன.
பிளாட்டினம் வெள்ளை, சில்வர் மெட்டாலிக், கிராபைட் மெட்டா லிக், ரைட் மைக்கா உள்ளிட்ட வெளிப்புற வண்ணங்களில் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. டொயோட்டா கிர்லோஸ்கர் மோட் டார் நிறுவனத்தின் விற்பனை மற்றும் விற்பனை யுக்திக்கான துணைத் தலைவர் அதுல் சூத் கூறியது:
மிகச்சிறந்த வாகனம் ஓட்டும் அனுபவத்தைத் தரும் வகையில், கேம்ரி ஹைபிரிட் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. தானியங்கி முறையிலான சார்ஜிங் வசதி போன்ற நீடித்த நிலையான அம்சத்துடன், நிறைந்த செயல்திறன், குறைந்த அளவில் புகை வெளியிடும் திறனைக் கொண்டிருக்கிறது கேம்ரி வாகனம்.
கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து இந்திய வர்த்தகச் சந்தையில் கேம்ரி ஹைபிரிட் வகை வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையிலே வாகனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன என்றார்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாகனத்தில் 4 சிலிண்டர் கேஸோலைன் ஹைபிரிட் டைனமிக் இன்ஜின், சக்திவாய்ந்த மோட்டார் ஜெனரேட்டர் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டுள்ளன.
ஸ்போர்ட், எகோ, நார்மல் என மூன்று விதமான ஓட்டும் திறன்களைக் கொண்டுள்ளன. ஹைபிரிட் வகை வாகனங்கள் 60 சதவீத நேரம் எலக்ட்ரிக் வகை அம்சத்திலே இயங்கும். இதன்மூலம் எரிசக்தியை திறம்பட பயன்படுத்த முடியும்.
வாகனத்தில் முன்புற இருக்கைகள், ஓட்டுநருக்கான இருக்கை மிகச்சிறந்த அனுபவத் தை தரும் வகையில் உள்ளன. வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், 10 வழிகளில் ஓட்டுநர் இருக்கையை சரி செய்து கொள்ளும் வசதி உள்ளன.
தொடு திரை வசதி மூலமாகவே ஆடியோ, ஏசி ஆகியவற்றை கட்டுப்படுத்தும் வசதி, மேல்புறத்தில் திறந்து கொண்டு நிலவொளியை பார்க்கும் வசதி உள்ளன.
அனைத்து பயணிகளுக்கும் காற்றுப் பைகள் இருக்கும் வகையில் வடிவ மைக்கப்பட்டுள்ளன.
வாகனத்தை முன் பதிவு செய்ய www.toyotabharat.com என்ற இணையதளத்திலோ அல்லது டொயோட்டா முகவரையோ அணுலாம்.



