fbpx
Homeபிற செய்திகள்டெங்கு காய்ச்சல் பரவல்: கோவை அரசு மருத்துவமனையில் கூடுதல் அவசர சிகிச்சை பிரிவு

டெங்கு காய்ச்சல் பரவல்: கோவை அரசு மருத்துவமனையில் கூடுதல் அவசர சிகிச்சை பிரிவு

டெங்கு காய்ச்சல் பரவிவரும் சூழலில், அரசு மருத்துவமனையில் குழந்தைகள், பெரியவர் களுக்கு கூடுதல் அவசர சிகிச்சை பிரிவை தயார் நிலையில் வைக்க சுகா தாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வரும் சூழலில், டெங்கு பரவல் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தடுப்பு நட வடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.

அந்த வகையில் அனைத்து அரசு மருத்துவ மனைகளி லும் கூடுதல் அவசர சிகிச்சை பிரிவுகளை ஏற்படுத்தி அவற்றை தயார் நிலையில் வைக்க உத்தரவிடப் பட்டுள்ளது.

கோவையை பொறுத்தவரை அவசர சிகிச்சை பிரிவில் குழந்தைகளுக்கு 15 படுக்கைகள், பெரியவர்களுக்கு 25 படுக்கைகள் என மொத்தம் 40 படுக்கைகளை அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா கூறுகையில், “அனைத்து விதமான இடர்பாடுகளையும் எதிர்கொள்ள மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதன் ஒரு பகுதியாக அவசர சிகிச்சைப் பிரிவை ஏற்படுத்த அறிவு றுத்தப்பட்டுள்ளது. கூடுதல் அவசர சிகிச்சை பிரிவு விரைவில் தொடங்கப்படும்.” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img