ஜேகுவார் லேண்ட் ரோவர் இந்தியா, சென்னையில் அதி நவீன புதிய சில்லறை விற்பனையாளர் ஷோரூம், விஎஸ்டி கிராண்டியூர் – திறந்துள்ளது.
கவர்ச்சிகரமான அதிநவீன வசதி, சிறந்த வாடிக்கையாளர் அம்சங்களை வழங்கிடும் வகையில், அண்ணா சாலையின் ஒரு பிரதான இடத்தில் இந்த ஷோரூம் அமைந்துள்ளது. இது இரண்டு நிலைகளைக் கொண்டு, அதிக பரப்பளவில் 11 கார்களை காட்சிக்கும் வைத்திடும் வகையில் அமைந்துள்ளது.
இந்தப் புதிய அமைவிடம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தற்போதுள்ள ஜேஎல்ஆர் ஷோரூம் மற்றும் சேவை அமைவிடத்தில் கிடைக்கும் அனுபவத்தை விட அதிகமாக வாடிக்கையாளர்கள் இந்த ஷோரூமில் உணர்வார்கள்.
வாடிக்கையாளர்களுக்கு ஜேகுவார் லேண்ட் ரோவரின் பல்வேறு தயாரிப்புகளை அனுப விக்க இந்த புதிய ஷோரூம் வழிவகுக்கிறது.
இதில் அங்கீகரிக்கப்பட்ட முன்னமே-சொந்தமாக்கப்பட்ட கார்கள் மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கான பரந்த அளவிலான ஜேகுவார் லேண்ட் ரோவர் பிராண்டட் பாகங்கள் மற்றும் பொருட்களை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நிறைந்துள்ள, இப்புத்தம் புதிய அமைவிடம் வாடிக்கையாளர் அனுபவத்தையும் இரண்டு பிரபலமான பிராண்டுகளுடனான ஈடுபாட் டையும் அதிகரிக்கும்.
ஜேகுவார் லேண்ட் ரோவரின் நிர்வாக இயக்குநரும் தலைவருமான ரோஹித் சூரி கூறுகையில், புதிய இடத்தில் அமைந்துள்ள ஜேகுவார் ஷோரூம், உலகத்தரமிக்க விற்பனையகத்தில் கிடைக்கும் அனுபவத்தை வாடிக்கையாளர்கள் உணரச் செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.



