fbpx
Homeபிற செய்திகள்சொத்துகள் வாங்க சரியான தருணம்: சென்னை கிரடாய் அறிவிப்பு

சொத்துகள் வாங்க சரியான தருணம்: சென்னை கிரடாய் அறிவிப்பு

கொரோனா தொற்று பரவலுக்கு பிந்தைய நிலையில் வணிக மற்றும் குடியிருப்பு சொத்துகள் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தற்போது சென்னையில் ரியல் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. எனவே சொத்துகள் வாங்க இது சரியான தருணம் என்று கிரடாய் அறிவித்துள்ளது.
கிரடாய் சென்னை பிரிவு தலைவர் சிவகுருநாதன் கூறியதாவது:

வீடுகள் அல்லது பிளாட்கள் வாங்குவதற்கு இது சரியான தருணம் ஆகும். இன்று கட்டுமான நிறுவனங்கள் விளம்பரம் செய்யும் குறைந்த விலையை இனி வரும் காலங்களில் எதிர்பார்க்க முடியாது.

மொத்த கட்டுமான செலவில் ஸ்டீல், மணல், சிமெண்ட், தண்ணீர் உள்ளிட்ட கட் டுமான பொருட்களின் செலவா னது 65 சதவீதம் வரை ஆகிறது. இது கட்டுமான நிறுவனங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கும் ஒன்றாக உள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் மட்டும், எஃகு விலை ஒரு டன் னுக்கு 65 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. அதே சமயம் செங்கல் விலை 200 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுடன் வட்டி விகிதமும் அதிகரித்து உள்ளது.

இதற்கு முன் 6 சதவீத வட்டியில் வீட்டு கடன்களை வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டு கடன் வழங்கும் நிறுவனங்கள் வழங்கி வந்தன. அது தற்போது 8 சதவீதமாக உயர்ந்து உள்ளது.

ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தும்போது இந்த வட்டி விகிதம் மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது. இவற்றுடன் குறைந்த அளவிலேயே கட்டப்பட்டு வரும் புதிய கட்டுமானங்கள் ஆகிய வற்றின் காரணமாக வரும் காலங்களில் இதன் விலை உயர வாய்ப்பு உள்ளது.

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) ஒற்றைச் சாளர முறையை அமல் படுத்தி இருப்பது குறி த்து நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இது எங்களின் நீண்ட கால கோரிக்கை ஆகும் என்றார்.

கிரடாய் சென்னை பிரிவு புதிய குழுவில் தேர்வு செய்யப்பட்ட தலைவராக முகமது அலி, துணைத் தலைவர்களாக மெஹுல் தோஷி, அபி ஷேக் மேத்தா, செயல £ளராக க்ருதிவாஸ், பொருளாளராக முகமது அஸ்லாம் பக்கீர், செயல் உறுப்பினர்களாக அருண், ரஞ்சித் ரத்தோட், விஷ் வஜித் குமார், ராம்குமார், மற்றும் சுமன் வூரா ஆகியோர் இடம் பெற் றுள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img