Homeபிற செய்திகள்சென்னையில் தொழில்சார் பாதுகாப்பு கண்காட்சி

சென்னையில் தொழில்சார் பாதுகாப்பு கண்காட்சி

மிகப்பெரிய கண்காட்சி களான தொழில்சார் பாதுகாப்பு, ஆரோக்கியம் சார்ந்த (OSH தென்னிந்தியா) இந்தியாவின் 7-வது கண்காட்சி, SAFE தென்னிந் தியா 2022-ன் 6-வது கண் காட்சி ஆகியவற்றின் திறப்பு விழா சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

கண்காட்சியை தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் டி. மனோ தங்கராஜ் திறந்து வைத்தார். தமிழ்நாடு தீயணைப்பு – மீட்புப் பணிகள் டிஜிபி / இயக்குநர் பிரஜ் கிஷோர் ரவி, தமிழ்நாடு அரசு தொழில்துறை பாதுகாப்பு – சுகாதார இயக்குநரக இணை இயக்குநர் எம்.வி. கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.

தமிழ் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தலைவர் சோழ நாச்சியார் ராஜசேகர், சென்னை சர்வதேச விமான நிலையத்தின் இயக்குநர் டாக்டர் ஷரத் குமார், Informa Markets in India-ன் நிர்வாக இயக்குநர் யோகேஷ் முத்ராஸ்,சீனியர் குழும இயக்குநர், டிஜிட்டல் தலைவர் பங்கஜ் ஜெயின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தியாவில் ஒரே கூரையின் கீழ் நடத்தப்பட்ட இந்த இரட்டைக் கண்காட்சிகள் தொழில்சார் ஆரோக்கியம், பாதுகாப்பு ஆகியவற்றின் அனைத்து அம்சங்களையும் காட்சிப்படுத்தின

சென்னையில் எதிர் பார்க்கப்பட்ட கண்காட்சி களான OSH, SAFE South India-ன் தொடக்க விழாவில் Informa Markets India-ன் நிர்வாக இயக்குநர் யோகேஷ் முத்ராஸ் பேசுகையில், “வலுவான பொருளாதார வளர்ச்சியைப் பராமரிப் பதற்கும், பெரிய அபாயங்கள் இல்லாத சூழல் நிலவுவதற்கும் தொழில்சார் ஆரோக்கியம், பணியிடத்தில் பாதுகாப்பு மக்களுக்குத் தேவை.

எந்த வொரு பொருளாதார மந்த நிலையையும் எதிர்த்துப் போராட இந்தியப் பொருளாதாரத்தைத் தூண்டு வதற்கு, பாதுகாப்பு நடவடி க்கைகளை மேம்ப டுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

அதே நேரம் அவற்றை முறையாகவும் சரியான நேரத்தில் நடைமுறைப்படுத்தவும் வேண்டும்” என்றார்.

EHS, EID Parry (India) Limited துணைத் தலைவர் மற்றும் ஹெட் ஜெயசங்கர், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையின் முன்னாள் கோட்ட அதிகாரி எம். நமசிவாயம், கெம்சிஸ் இன்னோவேட்டிவ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குநர் எட்வின் ஜென்சன் என்.எஸ்., டீம்டெக் ணிபிஷி நிர்வாக இயக்குநர் டிபில் குமார் வாசு, எஸ்.எம்.எஸ். உட்பட பலர் பேசினர்.

படிக்க வேண்டும்

spot_img