ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் சுதந்திர போ ராட்ட தியாகி இம்மானு« வல் சேகரன் குருபூஜை விழாவினை அரசு விழாவாக அறிவித்து, அரசு செலவில் மணிமண்டபம் அமைத்திட வலியுறுத்தியும் மாபெரும் பொதுக்கூட்டம் தேவேந்திர குல மக்கள் முன்னேற்ற பேரவையின் தலை வர் எஸ்.ஆர்.பாண்டியன் தலை மையில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸின் மாநில பொதுச்செயலாளர் துரை.தமிழரசு, தமிழர் தேசிய கழகம் தலைவர் வையவன், தமிழர் தேசம் கட்சியின் தலைவர் செல்வக் குமார்,தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் கே.எம்.ஷெரிப், தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் நாகை.திருவள்ளுவன், தாய்தமிழர் கட்சியின் தலைவர் பி.எம். பாண்டியன்,தேவேந்திரர் பண்பாட்டு கழகம் தலைவர் பரம்பைபாலா, தேவேந்திரகுல இளைஞர் பேரவையின் தலைவர் அழகர்சாமி பாண்டியன், தமிழர் உரிமை மீட்புகளம் தலைவர் லெனின் கென்னடி உள்ளிட் டோர் கலந்துகொண்டு பேசினர்.
பின்னர் எஸ்.ஆர்.பாண்டியன் செய்தியாளரிடம் கூறியதாவது:-
சுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகர னுக்கு அவரின் குருபூஜை விழாவினை அரசுவிழாவாக அறிவிக்க வேண்டும், அரசு செலவில் மணிமண்டபம் அமைத்து தர வேண்டும்.
வரும் செப்டம்பர் 11க்குள் அரசுவிழா அறிவிக்க வில்லை யென்றால் அடுத்தகட்ட நடவடிக் கையாக தமிழகம் முழுவதும் திரண்டு சென்னை கோட்டையை முற்று கையிடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



