தமிழ்நாடு அளவிலான ஜூனியர் ,சீனியர் சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிகள் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜனவரி மாதம் 26, 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெற்றது .
கோவை மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்ட வீரர், வீராங்கனைகள் 20 தங்கம் 9 வெள்ளி 19 வெண்கலம் என மொத்தம் 48 பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சீனியர் கோப்பையை கைப்பற்றியது.
இதில் சிலம்பாலயா மற்றும் இம்மார்டல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் கலந்து கொண்ட மாணவர்கள் சப்ஜூனியர் பிரிவில் 51- 55கிலோ கிரிஷ் ரோஷன் நேரடி போட்டியில் வெண்கலப் பதக்கம் (டிரினிட்டி மெட்ரிக் பள்ளி), மேரி பிரியதர்ஷினி 61-&65 கிலோ நேரடி போட்டியில் தங்கப்பதக்கம் (GRG கிருஷ்ணம்மாள் மேல் நிலைப்பள்ளி), 70 கிலோ பிரிவு நேரடி போட்டியில் மித்ரா GD மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வெண்கலப் பதக்கம், சீனியர் பெண்கள் பிரிவில் மிருதுளா *குத்து வரிசையில் தங்க பதக்கம் ( ராமகிருஷ்ணா கலை அறி வியல் கல்லூரி) சில்வியா நேரடி சண்டையில் வெண்கலப் பதக்கம் (பாரதியார் பல்கலைக் கழகம்), சீனியர் ஆண்கள் 50-கிலோ பிரிவில் நேரடி சண்டையில் பிரபாகரன் வெள்ளி பதக்கம், (அரசினர் தொழிற்பயிற்சி மையம்) 80-கிலோ பிரிவில் நவீன் வெள்ளி பதக்கம், 55 கிலோ பிரிவில் அருண் பாண்டியன் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிலம்பாலயா ஆசிரியர் டாக்டர் செல்வகுமார் மற்றும் கோவை மாவட்ட செயலாளர் டாக்டர் சுதாகர், பயிற்சியாளர்கள், சரண்ராஜ், ரஞ்சித் குமார், பெற்றோர்கள் வாழ்த்தினார்கள்.



