சென்னையில் உள்ள சவீதா பல் மருத்துவக் கல்லூரி, சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம், இந்தியாவிலேயே முதல் முறையாக நானோ கம்ப்யூட்டர் டோமோகிராபி சிகிச்சை முறையை அறிமுகம் செய்துள்ளது.
ஸ்கைஸ்கேன் 2214 என்ற டோமோகிராபி கருவியை இம்மருத்துவமனை ப்ரூக்கர் நிறுவனத்திடம் இருந்து வாங்கி உள்ளது. இந்த புதிய கருவி உடலின் உட்புறம் உள்ள ஒவ்வொரு சிறிய பாகங்களையும் தெளிவாக பிரித்துக் காட்டும் தன்மை கொண்டதாகும்.
இதன் காரணமாக அந்த உறுப்புகளின் செயல்பாடுகளை மருத்துவர்கள் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.இந்த புதிய மல்டிஸ்கேல் எக்ஸ்ரே நானோடோமோகிராபி என்னும் இந்த ஒரு கருவி மூலம் உடலின் உட்புறம் உள்ள சிறிய மற்றும் பெரிய அளவிலான பாகங்களின் செயல்பாடுகளையும் நாம் எளிமையாக அறிந்து கொள்ள முடியும்.
இது 3D இமேஜிங் தொழில்நுட்பத்தின் புதிய மற்றும் தனித்துவமான சிறப்புகளைக் கொண்டுள்ளது.
அத்துடன்கனிம திசுக்கள், மென்மையான திசுக்கள், தாவரங்கள், பூச்சிகள், பழங்கால மாதிரிகள் மற்றும் பல வகைகள் உட்பட அனைத்து வகையான உயிரியல் மாதிரிகளின் துல்லியமான மாதிரிகளையும் உள்ளடக்கி உள்ளது.
அறிவியல் மாதிரிகளைப் புரிந்துகொள்வதற்கும் ஆய்வு செய்வ தற்கும் இந்த கருவி பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மயக்க நிலையில் இருக்கும் சிறிய விலங்குகளின் உட்புற உறுப்புகளை ஆய்வு செய்வதற்கும் இந்த கருவி மிகுந்த பயனுள்ளதாக இருக்கிறது. இந்த கருவி மருத்துவம், பல் மருத்துவம், மருந்தியல், கட்டிடக்கலை மற்றும் பொறியியல் வல்லுனர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.



