fbpx
Homeதலையங்கம்சபாஷ்! மின்சார புகார்களுக்கு உடனடி தீர்வு

சபாஷ்! மின்சார புகார்களுக்கு உடனடி தீர்வு

சபாஷ் – தமிழகம் முழுவதும் 40 நாட்களில் 1.51 லட்சம் மின்சார புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

அனைத்து மின் பகிர்மான மாவட்ட தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள், வட்டார பொறியாளர்கள் ஆய்வு கூட்டம் சென்னையில் நடந்தது.

மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் இயக்குனர் ராஜேஷ் லகானி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் 40 நாட்களில் மின்சார வாரிய தொடர்பான புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கைகள், உயர் மட்ட மின் பாதையை குறைத்து புதைவட பாதையாக மாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்தின்போது அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில் தமிழகம் முழுவதும் மின்சார வாரியம் தொடர்பாக 1 லட்சத்து 60 ஆயிரம் புகார்கள் வந்தன.

இதில் ஒரு லட்சத்து 51 ஆயிரம் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டுள்ளது;

மீதம் உள்ள புகார்களுக்கான தீர்வு குறித்து ஆலோசிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மக்கள் அளிக்கும் புகார்களுக்கு உடனடி தீர்வு காணும் மின்சார துறைக்கு ஒரு சபாஷ்!.

படிக்க வேண்டும்

spot_img