கோவை மாநகராட்சி சங்கனூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் கழிப்பிடங்கள் கட்டுவதற்கு மாநகராட்சி ஆணையாளர் பிரதாபிடம் கிராஸ்கட் சாலையிலுள்ள ஜோய் ஆலுக்காஸ் ஜுவல்லரி மண்டல மேலாளர் சுமேஷ், மேலாளர் ரியோன், மண்டல மக்கள் தொடர்பு அலுவலர் ஷாஜி மேத்யூ ஆகியோர் நிறுவன பங்களிப்பாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்கள். உடன் உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி உள்ளார்.



