கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவி எஸ்.எஸ்.ரோஷிணிக்கு, திருவையாறு தமிழ் ஐயா கல்விக் கழகம் சார்பில் நடத்தப்பட்ட பாரதியார் பாடல்கள் பயிலரங்கில், ‘பாரதியார் பாட்டுக்குயில்’ விருது வழங்கப்பட்டது.
இணைய வழியில் நடைபெற்ற இப்பயிலரங்கில் உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிலிருந்து சுமார் 500 பேர் பங்கேற்றனர். விருது பெற்ற மாணவியைக் கல்லூரி முதல்வர் முனைவர்
கி.சித்ரா பாராட்டினார்.



