கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2021-&-2022 நிதி ஆண்டிற்கான நேரடி கூட்டுறவு பட்டயப் பயிற்சிக்கான துவக்க விழாவை, மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் எஸ்.பார்த்திபன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
கோவை சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் கிருஷ்ணன் மற்றும் ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலைய துணைப் பதிவாளர்/ முதல்வர் நா.ஸ்ரீதர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



