உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, கோவை ஜி.குப்புசாமிநாயுடு நினைவு மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவத்துறை சார்பில், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் இணைந்து இந்நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இளஞ்சிவப்பு (பிங்க்) வண்ணத்திலான பலூன்களை வானில் பறக்க விட்டனர். அக்டோபர் மாதம் முழுவதும் ஜி.கே.என்.எம். மருத்துவமனை வளாகம் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் பெண்களுக்கு இலவச மார்பக பரிசோதனை நடத் தப் பட்டது. பல்வேறு முன்னணி நிறுவனங்களில் ஜி.கே.என்.எம். சார்பில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்குகளும் நடத்தப்பட்டன.



