கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்திற்கு வழங்கவேண்டிய கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியில் ரூ.35,53,998 கூட்டுறவு கல்வி நிதியில் ரூ.23,69,332 என மொத்தம் ரூ.59,23,330க்கான காசோலையை கூடுதல் பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் இந்துமதி தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் கூடுதல் பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர் மாதவனிடம் வழங்கினார்.
அருகில் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன், இணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் டியூகாஸ் சிவக்குமார், இணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர் சிந்தாமணி கூட்டுறவு விற்பனை சங்கம் பிரபு சரக துணைப்பதிவாளர் கிருஷ்ணன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாண்மை இயக்குநர் முத்துக்குமார் ஆகியோர் உள்ளனர்.



