fbpx
Homeபிற செய்திகள்பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு பேரணி

பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு பேரணி

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரிய பட்டினம் ஊராட்சியில் பிளாஸ்டிக் தடை குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பெரிய பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர்ஜான் பீவி தலைமை தாங்கினார்.

பெரியபட்டினம் ஒன்றிய கவுன்சிலர்கள் பைரோஸ் கான் மற்றும் சுமதி ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற துணைத் தலைவர், தூய்மைப்பணியாளர்கள், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் அங்க ன்வாடி பணிய £ளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு வணிக நிறுவனத்திற்கும் பிளாஸ்டிக் பயன்பாடு தடை என்பதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. பேரணிக்கான ஏற்ப £ட்டினை பெரியபட்டினம் ஊராட்சி செயலாளர் சேகு ஜலாலுதீன் செய்திருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img