fbpx
Homeபிற செய்திகள்கோவை, பொள்ளாச்சி எம்.பி. தொகுதிகளின் வெற்றிக்கு அடித்தளத்தை அமைக்க வேண்டும்- கோவையில் செந்தில் பாலாஜி பேச்சு

கோவை, பொள்ளாச்சி எம்.பி. தொகுதிகளின் வெற்றிக்கு அடித்தளத்தை அமைக்க வேண்டும்- கோவையில் செந்தில் பாலாஜி பேச்சு

கோவைக்கு வருகை தரவுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஒருங்கிணைந்த கோவை மாவட்டக் கழகத்தின் சார் பில் மாபெரும் வரவேற்பு தரவேண்டும் என்றும், முதல்வர் பங்குகொள்ளும் நிகழ்ச்சிகளில் தி.மு.க-வினர் பெருந்திரளாக பங்கு கொள்ளவேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது.

கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் காளப்பட்டி சுகுணா ஆடிட்டோரியத்தில் நடந்தது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை குறித்து ஆலோசனை நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:

ஜூலை 15-ம் தேதி மாலை பொள்ளாச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். இதில் மாற்றுக் கட்சியினர் பலர் தி.மு.க-வில் இணையவுள்ள னர். மேலும் இந்த செயற்கு ழுக் கூட்டத்தின் அடுத்த இலக்கு வருகின்ற நாடாளு மன்றத் தேர்தலாக இருக்கவேண்டும்.

இந்தியாவில் இருக்கும் முதல்வர்களுக்கெல்லாம் முதல்வராக தமிழ்நாட்டில் சிறந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் நம் முதல்வர். நம் மாநிலத்தில் உள்ள திட்டங்களை இந்தியா முழுவதும் செயல் படுத்தக்கூடிய வகையில் தீர்மானிக்கக் கூடிய சக்தியாக திகழ 39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் நாம் வென் றிட வேண்டும்.

கோவை, பொள்ளாச்சியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறவேண்டும். சில பேர் கோவையிலும், பொள்ளாச்சியிலும் கூட்டங்களை நடத்தி மாய தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள். இந்த மேடை வாயிலாக, கோவை டாக்டர் கலைஞர் அவர்களின் கோட்டை யாக இருந்தது.

மீண்டும் இப்பொழுது தளபதி அவர்களின் இரும்பு கோட் டையாக இருக்கிறது என்பதை நிரூபித்து காட்ட வேண்டும். உள்ளாட்சித் தேர்தலில் இரவு பகல் பாராமல் அயராது வெற்றிக்கு உழைத்ததுப்போல், வருகின்ற நாடாளுமன்றத் தேர் தல் வெற்றிக்கும் ஒன்றுபட்டு உழைத்திட வேண்டும்.

கோவை, பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகு திகளில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கான அடித்த ளத்தை அமைக்க வேண் டும். நிச்சயம் வெற்றி பெறு வோம் என்ற நிலையை உருவாக்கிட வேண்டும்.
இதற்கு கூட்டம் போட் டார்கள், அதற்கு கூட்டம் போட்டார்கள் என்று சில பேர் சில கருத்துகளைச் சொல்லலாம்.

நாம் கூட்டம் இல்லை, நாம் மலை. நமது தலைவர் ஒரு மலை. சில மடுக்கள் மலையோட மோத நினைக்கிறார்கள். அவர்கள் சில நேரங்களில் சில வார்த்தைகளை கூறிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் கருத்துக்கு நாம் செவி சாய்க்க அவசியம் இல்லை. இவ்வாறு அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார்.

இந்த செயற்குழு கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் மு.கண்ணப்பன், பொங் கலூர்பழனிச்சாமி, மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), பையா ஆர்.கிருஷ்ணன், சிஆர்.ராமச்சந்திரன், மருதமலை சேனாதிபதி, டாக்டர்.வரதராஜன், ஜெயராமகிருஷ்ணன், பத்மநாபன், மாநில தக வல்தொழில்நுட்ப அணி இணைச்செயலாளர் மகேந்திரன், எம்பி.சண்மு கசுந்தரம், துணைமேயர் வெற்றிச்செல்வன், மற்றும் மாநில அணி பொறுப் பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img