கோவை மாநகராட்சி, துடியலூர் அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் பில்லூர் 3-வது குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சமன் செய்து சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
உடன் மாமன்ற உறுப்பினர் கற்பகம், உதவி ஆணையாளர் மோகனசுந்தரி, உதவி பொறியாளர் சக்திவேல், சுகாதார அலுவலர் ராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



