fbpx
Homeபிற செய்திகள்கோவை திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட 'பகீர்' தகவல்: ஜெயலலிதா மரணம் - நீதிபதி ஆறுமுகசாமி...

கோவை திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட ‘பகீர்’ தகவல்: ஜெயலலிதா மரணம் – நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் பல பிரச்சினைகள்

முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி யின் பேத்தியும், திமுக மாநில இளைஞரணி இணைச்செயலாளருமான பைந்தமிழ்பாரி – கீதா தம்பதியின் மகளுமான ஸ்ரீநிதிக்கும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான மதியழகன் – விஜயா தம்பதியின் மகனுமான கௌசிக் தேவ் ஆகியோரது திருமண விழா கோவை கொடிசியா அரங்கில் இன்று நடைபெற்றது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி திரும ணத்தை நடத்தி வைத்து பேசியதாவது: எப்போதும் மக்கள் மனுக்களை கொடுக்கும் போது, ஏக்கத்தோடும், வருத்தத்தோடும் கொடுப்பதைத்தான் பார்த்திருக்கிறேன்.

ஆனால், அதே மக்கள் என்னிடத்தில் மனுக்களை கொடுக்கும் போது, மகிழ்ச் சியோடு பூரிப்போடு, நம் பிக்கையோடு கொடுத்து விட்டு நன்றி கூறுகின்றனர். இன்று மனுகொடுத்த பின்னர் மக்களிடத்தில் நம்பிக்கை வந்திருக்கிறது என்றால், அதுதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு “ உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப் பில் பயணத்தை நான் நடத்தினேன். அந்த பயணத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்றேன்.

நிகழ்ச்சி மேடையில், ஒரு பெட்டி வைக்கப்பட்டிருக்கும், மக்கள் மனுக்களை அந்த பெட்டியில் போடலாம். அதேபோல், நிகழ்வு நடந்த இடத்தின் நுழைவுவாயிலில் இளைஞர்கள் அமர்ந்து, மனுக்கள் குறித்த விவ ரங்களை பதிவு செய்து அதன்பின்னர்தான் அந்த மனுக்கள் பெட்டிக்கு வந்து சேர்ந்தன.

அப்போது மக்களிடம் ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் இந்த பிரச் சினைகளை எல்லாம் தீர்த்துவைப்பேன் என்று நான் உறுதியளித்தேன். ஆட்சிக்குவந்த பிறகு அந்த பெட்டிகள் அனைத் தும் கோட்டைக்கு வந்தன.

அதற்காக ஒரு துறையை உருவாக்கி, அந்த துறைக்கென்று ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப் பட்டார். ஒரு குழு நியமிக் கப்பட்டு, மனுக்கள் குறித்து ஆய்வு செய்து, எந்தெந்த பணிகளை எல்லாம் உடனுக்குடன் முடிக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு நிறை வேற்றப்பட்டது. அந்த மனுக்களில் 70 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவில் மர்மம் இருப்பதாக அவர்கள் கட்சியிலேயே கூறினார்கள். அப்போது ஏற்பட்ட பிரச்சினையில், ஜெயலலிதா சமாதியில் போய் அமர்ந்துகொண்டு ஆவியோடு பேசுகிறேன் என்றுகூறி அமர்ந்தார்.

அங்கு சென்று தியானம் செய்து நீதி கேட்டார். ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரே கூறினார். அவரை சரி செய்ய வேண்டும் எனபதற்காக ஒரு ஒப்புக்காக ஒரு கமிஷன்.அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறி வித்தார்.

ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமை யில் ஒரு கமிஷன் அமைக் கப்பட்டது. அந்த கமிஷன் சும்மா ஒப்புக்காக நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அறிவித்தோம், ஆட்சிக்கு வந்தால், கமிஷனை முறையாக நடத்தி, முறையாக அறிக்கை யைப் பெற்று முறையான நடவடிக்கையை இந்த ஆட்சி எடுக்கும் என்று உறுதியளித்தோம்.

ஐந்தாறு நாட்களுக்கு முன்னால் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி அந்த அறிக்கையை என் னிடத்தில் கொடுத்தார். அந்த அறிக்கையில் பல பிரச்சினைகள் இருக்கு. அதுகுறித்து இப்போது நான் கூறமாட்டேன்.

சட்டமன்றத்தில் வெளிப்ப டையாக வைக்கி றோம், எங்களுக்குள் வைத்துக் கொண்டு நாங்கள் முடிவு எடுக்கமாட்டோம். சட்டமன்றத்தில் வைத்து அதற்கு உரிய நடவடிக்கையை நிறைவேற்றிக் காட்டுவோம் என்று உறுதியளிக்கிறேன்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு அறிக்கை ஒரு மாத காலத்திற்கு முன் என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதுகுறித்து சட்டமன் றத்தில் விவாதிக்க இருக் கிறோம்.
சட்டமன்றத்தில் கொடுத்த வாக்குறு திகளை எல்லாம் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டி ருக்கக்கூடிய ஆட்சிதான் திமுக ஆட்சி. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த திருமண விழாவிற்கு திமுக இளை ஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வாழ்த்து மடல் அனுப்பினார். மேலும் திருமண விழாவில், அமைச்சர்கள் பொன்முடி, எ.வ.வேலு, செந்தில்பாலாஜி, காந்தி, நாசர், வெள்ளகோவில் சாமிநாதன், ராமச்சந்திரன், கயல்விழி செல்வராஜ், எம்பிக்கள் அந்தியூர் செல்வராஜ், கலாநிதி, முன்னாள் அமைச்சர் மு.கண்ணப்பன், மேயர் கல்பனா ஆனந்தகுமார், எம்எல்ஏக்கள் செல்வராஜ், கொங்கு ஈஸ்வரன், டிஜிபி சைலேந்திரபாபு, லியோனி, மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கோவை விமான நிலையத்தில் இருந்து கொடிசியா அரங்கு வரை வழி நெடுகிலும் திமுகவினரும், பொதுமக்களும் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img