fbpx
Homeபிற செய்திகள்கோவை அவினாசி சாலையில் பில்லர் 129 - புதிய டிரைவ் இன் ரெஸ்டாரெண்ட் 6ம் தேதி...

கோவை அவினாசி சாலையில் பில்லர் 129 – புதிய டிரைவ் இன் ரெஸ்டாரெண்ட் 6ம் தேதி துவக்கம்

கோவை நகரில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நிக்வின் விருந்தோம்பல் சேவை நிறுவனம் உணவு துறையில் தனி முத்திரை பதித்து வருகிறது.

இந்நிலையில் கோவை நகரின் முக்கிய பகுதியான அவினாசி சாலையில் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் பில்லர் 129 எனும் புதிய ட்ரைவ் இன் ரெஸ்டாரெண்ட் வரும் 6 தேதி துவங்க உள்ளது.

இந்நிலையில் இது குறித்து, நிக்வின் விருந்தோம்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் பில்லர் 129 ன் உரிமையாளருமான மோகன் சந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவை நகரில் உணவகங்கள் பல இருந்தாலும் ட்ரைவ் இன் வசதி கொண்ட ரெஸ்டாரெண்ட் நகரின் மைய பகுதியில் இதுவே முதல் முறையாக துவங்கப்படுகிறது.

ஒரே நேரத்தில் இருபதுக்கும் மேற்பட்ட கார்களை நிறுத்தி உணவு உண்ணும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த உணவகத்தில் சைனீஸ், தாய், மலாய், பர்மிஸ், அரேபியன் மற்றும் இந்திய வகைகள் அனைத்து விதமான கான்டினெண்டல் உணவு வகை பரிமாறப்படும்.

ட்ரைவ் இன் வசதி மட்டும் அல்லாது குளிர் சாதன வசதியுடன் அமர்ந்து சாப்பிடும் வகையிலான டைனிங் ஹால், பிறந்த நாள் போன்ற பிரத்யேக விழாக்களுக்கென சிறிய பார்ட்டி ஹால் வசதியும் இங்கு உள்ளது.

காலை பதினோரு மணி முதல் இரவு பதினோரு மணி வரை செயல்பட உள்ள பில்லர் 129 ரெஸ்டா ரெண்ட் கோவை வாழ் மக்களிடையே பெரும் வர வேற்பை பெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது நிக் வின் விருந்தோம்பல் நிறுவனத்தின் இயக்குனர் உமா உடனிருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img