fbpx
Homeபிற செய்திகள்கோவையில் வோக்ஸ்வாகன் டைகுன் அறிமுகம்

கோவையில் வோக்ஸ்வாகன் டைகுன் அறிமுகம்

வோக்ஸ்வாகன் பாசஞ்சர் கார்ஸ், நவீன அம்சங்களுடன் தனது புதிய மாடல் டைகுனை இந்த மாதம் 23-ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. அதன் முன்னோட்டமாக வாடிக்கைய £ளர்கள் டைகுனை இயக்கி அனுபவிக்க கோவையில் பிரத்யேக ஏற்பாடு செய்துள்ளது.

பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களில் SUVW வோக்ஸ்வாகன் டைகுன் வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக முன்னோட்டத்தை வழங்கி உள்ளது.

தற்போது மூன்றாவதாக கோவையிலும், அதனைத் தொடர்ந்து மும்பை, ஹைதராபாத், அகமதாபாத், கொல்கத்தா, சண்டிகர் ஆகிய நகரங்களில் இந்த முன்னோட்டம் நடைபெற இருக்கிறது.

வோக்ஸ் வாகன் பாசஞ்சர் கார்ஸ் இந்தியாவின் பிராண்ட் இயக்குநர் ஆஷிஷ்குப்தா கூறிய தாவது: தெற்கு பகுதியில் முக்கியவத்தும் வாய்ந்த சந்தை கோவையாகும். இங்கு டைகு னின் பிரத்யேக முன்னோட்டம் நடக்கிறது.

எங்கள் வாடிக் கையாளர்களுக்கு புதிய அறிமுகம் மற்றும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட SUVW வோக்ஸ்வாகன் டைகுனை அதிகாரப்பூர்வ வெளியீட்டுக்கு முன்பே அனுபவிக்க ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது என்றார்.

சமீபத்தில் செயல்படுத்தப்பட்ட 360 டிகிரி விஷுவலை சருடன் வாடிக்கையாளர்கள் மொபைல்போன்கள், டேப் லெட்கள், மடிக்கணினிகள் அல்லது டெக்ஸ்டாப்புகள் போன்ற டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்ட சாதனங்கள் மூலம் தங்கள் வீடுகளில் இருந் தபடியே வசதியாக டைகுனின் அம்சங்களைப் பார்க்க உதவுகிறது.

டைகுனின் உள் பாகங்கள் பற்றிய தகவல்களையும் அறியலாம். கவர்ச்சியான வெளிப்புறங்கள், டிஜிட்டல் காக்பிட் உள்ளிட்ட பிரீமியம் உட்புறங்கள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட உள்ளமைக்கப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கவர்ச்சியான வடிவமைப்பைக் கொண்டுள்ளது டைகுன்.

சிறந்த கட்டமைக்கப்பட்ட தரம், பாதுகாப்பு மற்றும் ஜாலியாக ஓட்டும் அனுபவத்தை டைகுன் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

வோக்ஸ்வாகன் உலகளவில் புகழ்பெற்ற டிஎஸ்ஐ தொழில் நுட்பத்தால் இயக்கப்படுகிறது. இரண்டு இன்ஜின் அமைப்புடன் கிடைக்கும்.

1.5லி TSI உடன் 7-ஸ்பீடு DSG மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 1.0லி TSI இன்ஜின் 6ஸ்பீடு ஆட்டோ மேட்டிக் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய வோக்ஸ்வாகன் அனுபவத்தை பெற கோவையில் உள்ள ரமணிகார்ஸை அணுகி பார்வையிடலாம் என தெரி விக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img