கிருஷ்ணகிரியில் தண்டுவடம் காயம டைந்தோர் அமைப்பு சார் பில் வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
முதுகு தண்டுவட பாதிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே தண்டுவடம் காய மடைந்தோர் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் சரத்குமார் தலைமையில் வாகன ஓட்டிகளிடம் சாலை பாதுகாப்பு விதிகள், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விளக்கி துண்டுபிரசுரம் வழங்கினர்.
அப்போது அவர் ஹெல்மெட் அணியாமல் டூவிலரில் வந்தவர்களிடம் தயவு செய்து ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுங்கள், முகக்கவசம் அணியுங்கள், காரில் பய ணிப்போர் சீட் பெல்ட் அணியுங்கள் எனவும், விபத்தினால் தண்டுவட பாதிப்பு ஏற்பட்டால் நடக்க முடியாத சூழல் ஏற்படும். அதில் பாதிக்கப்பட்ட எங்க ளுக்குதான் அதன் கஷ்டம் தெரியும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் விபத்தினால் தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் 83 பேரும், தமிழகம் முழுவதும் 2,300க்கும் மேற்பட்டோரும் உள்ளனர்.
எனவே சாலை விதி களை மதித்து செல்லுங்கள் என அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியின் போது, கிருஷ்ணகிரி தாலுகா எஸ்.ஐ.,சின்னசாமி, பார்த்திபன் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.



