fbpx
Homeபிற செய்திகள்கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவையில் ஆர்ப்பாட்டம்

தீஸ்டா செடல்வாட், சிறீ குமார் கைதுக்கு கண்டனம் தெரிவித்து மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

2002ம் ஆண்டு குஜராத் கலவரம் தொடர்பாக மோடி மீது வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் வழக்கு தொடர்வதற்கு பின்னணியில் செயல்பட்டதாக கூறி சமூக செயற்பாட்டாளர் தீஸ்டா, மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சிறீகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் சேகர் அண்ணாதுரை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாஜக அரசை கண்டித்தும் கைது நடவடிக்கையை கண்டித்தும் கண்டன பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதில் விடுதலை சிறுத்தைகள் உட்பட பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img