fbpx
Homeபிற செய்திகள்கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் கொண்டாட்டம்

கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் கொண்டாட்டம்

ஆகஸ்ட் 1 முதல் 15ஆம் தேதி வரை கேபிஆர் பொறியியல் கல்லூரியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன, அவை அறிவியல் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், மரக்கன்றுகள் நடுத்தல், பள்ளி மாணவர்களுக் கான் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள்.

கல்லூரி மாணவர்கள் காண கவிதை போட்டி, பாடல், நடனம்,பேச்சு, ஓவியப் போட்டிகள் முதலானவையும் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

ஆகஸ்ட் 15 அன்று கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் 76 வது சுதந்திர தின கொடியேற்று விழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

இதில் கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் அகிலா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மகாகவி பாரதியாரின் எள்ளு பேரன் நிரஞ்சன் பாரதி கலந்து கொண்டு கொடி ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

பின்னர் நடைபெற்ற என்சிசி மாணவர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார், அதன் பின்னர் மாணவர்களின்கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிக்கு அனைத்து துறை தலைவர்கள் பேராசிரியர்கள் மாணவர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img