fbpx
Homeபிற செய்திகள்குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு ஆதரவு தர வாத்வானி அறக்கட்டளை அழைப்பு

குறு, சிறு, நடுத்தர தொழில்நிறுவனங்களுக்கு ஆதரவு தர வாத்வானி அறக்கட்டளை அழைப்பு

சர்வதேச குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்நிறுவனங்கள் துறை(MSME) தினத்தை முன்னிட்டு, கொரோனா நோய்த் தொற்றுக்கு பிந்தைய காலங்களில், தொழில்நிறுவனங்களுக்கு கட்டமைக்கப்பட்ட ஆதரவு தர வேண்டும்.

சிறு வணிகங்கள் புதிய சந்தை இயக்கவியலுக்கு தங்களை உட்படுத்திக் கொள்ள வேண்டும். போட்டித்தன்மையை சீராக அணுகவும், தயாரிப்புகளில் நம்பகத்தன்மையை உறுதிப்ப டுத்தவும் வேண்டும் என்று உலகளாவிய லாப நோக்கமற்ற வாத்வானி அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.

செலவு குறைந்த நிதிக்கான அணுகல் முயற்சியாக டிஜிட் டல் தொழில்நுட்பத்திற்கு மாற வேண்டும். இத்தொழில்நுட் பத்தில் சிறு தொழில் நிறுவனங் களை தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இது இல்லாமல் அவை வளர சாத் தியக்கூறுகள் மிகவும் குறைவு.

வியாபாரத் தொடர்புகளை விரிவுபடுத்தவும், சிறந்த நிதித் திறமைகளை கைய £ளவும், எண்ணற்ற வாடிக்கை யாளர்களைப் பெறவும் டிஜிட்டல் தொழில்நுட்பம் உதவும். இதனால் கைமுறை திறமையின்மையால் ஏற்படும் தவறுகள் களையப்படும்.

மேம்பாடு மற்றும் மறுதிறன் டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி குறு, சிறு தொழில்நிறுவனங்கள் முன்னேறிக் கொண்டிருக்கின்றன.

குறு நிறுவனங்கள் சிறிய நிறுவனங்களாகவும், சிறியவை நடுத்தர அளவிலான தொழில்நிறுவனங்களாகவும் முதிர்ச்சி அடைய வேண்டும்.

தென்கிழக்கு ஆசியா வாத் வானி அறக்கட்டளை தலைவர் சஞ்சய் ஷா கூறியதாவது: இந்தியாவில் 63 மில்லியன் குறு, சிறு தொழில்நிறுவனங்கள் 111 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருகின்றன.

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியிலும், வளர்ச்சியிலும் அவற்றின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தொற்றுநோய்க்கு பிந்தைய காலத்தில், பெரும்பாலும் டிஜிட் டல் மயமாக்கலை ஏற்றுக் கொள்வதன் மூலம் தொழிலில் வேகமான வளர்ச்சி காண முடி யும்.

வாத்வானி அட்வாண்டேஜ் வளர்ச்சியை மையமாகக் கொண்டு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (SMEs) ஆதரிப்பதில் செயல்படுகிறது. பெரிய SMEகளுக்கான திட்டம் மற்றும் சிறிய SMEகளை அளவிடுவதற்கான DIY (சுயமாக செயல்படு) திட்டம்.

இரண்டும் இந்த திட்டங்கள் SMEகளுக்கான மெய்நிகர் ஹெல்ப் டெஸ்க் ஆதரவுடன் அதிகரிக்கப்படும். கூடுதலாக, வாத்வானி அட்வாண்டேஜ் சமூக தளத்தையும் தொடங்குகிறது.

MSMEகளின் வளர்ச்சியைத் தடுக்கும் பல சவால்கள் உள்ளன. அவை உள்கட்டமைப்பு, மூலதனத் திற்கான அணுகல் இல்லாமை, குறைந்த உற்பத்தித்திறன் மற்றும் புதுமையின் பற்றாக்குறையால் வருகின்றன.

இதன் விளைவாக, 99% வணிகங்கள் வாழ்க்கைச் சுழற்சியில் வளர்ச்சி அடையவில்லை என்றார்.

Assocham-Crisil இன் ஆய்வின்படி, இந்தியாவின் MSME துறையானது மீண்டும் எழுச்சி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படிக்க வேண்டும்

spot_img