வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோயில் அகில பாரத சன்னியாசிகள் சங்கம் சார்பில் பாலாறு பெருவிழா தங்க கோயில் ஸ்ரீ சக்தி அம்மா தலைமையில் நடைபெற்றது. விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவில் இயற்கை என்கின்ற பஞ்சபூதங்களை வழிபட்டு பாதுகாத்தோம் கால மாறுதலால் நாத்திகளாலும் குறைபாடுகள் ஏற்பட்டு வழிபட மறந்தோம். இதனால் இயற்கை நமக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. அவற்றை நிவர்த்தி செய்து நாம் பாதுகாத்தால் இயற்கை நம்மை பாதுகாக்கும்.
ஆகவே பாலாற்றினை பாதுகாத்து நாம் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவோம். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ரத்தினகிரி பாலமுருகன் அடிகளார் பாலாறு மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆம்பூர் ஜெய்சங்கர் அறங்காவலர் சௌந்தர்ராஜன் மேலாளர் சம்பத் டாக்டர் பாலாஜி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



