fbpx
Homeபிற செய்திகள்குடிநீர் வசதி கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

குடிநீர் வசதி கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் சர்க்கார் சாமகுளம் பேரூ ராடசிக்கு உட்பட்ட கள்ளிப்பாளையம் பஞ்சாயத்து ராயல் என்கிளேவ்ல் 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தங்கள் குடியிருப்பு அமைக்கப்பட்டு 3 ஆண் டுகளுக்கு மேலாகியும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை என்று கூறி அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் இன்று கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “நாங்கள் வங்கிக் கடன் பெற்று இங்கு வீடு கட்டி குடியி ருந்து வருகிறோம். மூன்று ஆண்டுகளாகியும் எங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட வில்லை

இதுகுறித்து பலமுறை பஞ்சாயத்தில் மனு அளித்துள்ளோம். எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனா மாதம் தோறும் 3 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து லாரி தண்ணீர் வாங்கி உபயோகிக்கிறோம்.

ஏற்கனவே வங்கி கடனில் தவிக்கும் எங்களுக்கு இது மேலும் சுமையாக உள்ளது. உடனடியாக எங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும்.” என்றனர்.

படிக்க வேண்டும்

spot_img