ராமநாதபுரம் மாவ ட்டம், கீழக்கரை 20வது வார்டு பெத்திரி தெருவில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு மற்றும் கண்ணாடி வாப்பா அறக் கட்டளை இணைந்து அனைத்து சமுதாய பொது மக்கள் பயன் பெறும் வகையில் கட்டணமில்லா குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
அனைத்து சமுதாய கூட்டமைப்பு ஆலோசகர் டாக்டர் றிஸிலி.சதக் அப்துல் காதர் தலைமை யேற்று துவக்கி வைத்தார். மெஜஸ்டிக் கே.வி.எம்.அகமது காமில் முன்னிலை வகித்தார். அனைத்து சமுதாய கூட்டமைப்பு செயலாளரும், 20-வது வார்டு கவுன்சிலருமான சேக் உசைன், நிர்வாக குழு உறுப்பினர் அப்தாஹிர் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை செய்தி ருந்தனர். அனைத்து சமுதாய கூட்டமைப்பு பொருளாளர் ஆசிப் உசைன் நன்றி கூறினார்.



