சுதந்திர போராட்ட வீரரின் வீட்டிற்கு சென்று மரியாதை செலுத்தி, அவரது மனைவியின் காலில் விழுந்து கரூர் கலெக்டர் ஆசி பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கரூர் அருகே வாங்கப்பாளையம் பகுதியில் உள்ள மறைந்த சுதந்திர போராட்ட தியாகி முத்துசாமி என்கின்ற காளி முத்துவின் வீடு உள்ளது. இந்நிலையில் தியாகியின் மனைவி பழனியம்மாளை சந்தித்த கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், வீடு தேடிச் சென்று பொன்னாடை அணிவித்து கௌரவப்படுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
முன்னதாக தியாகியின் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியதோடு, சுதந்திர போராட்ட வீரரின் மனைவியான பழனியம்மாளின் காலில் விழுந்து, கலெக்டர் ஆசிர்வாதம் பெற்றார்.
இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பழனியம் மாளுக்கு நினைவு பரிசு களையும் கலெக்டர் வழங்கினார்.



