பெருந்தலைவர் காமராஜர் 120 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அன்னூர் ஒன்றியத்தில் உள்ள புதுப் பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு நமது சிலம்பாலயா விளையாட்டு மற்றும் பொது நல அறக்கட்டளை சார்பில் 17 மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலர் மரியாதைக்குரிய இ.ஆனந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். சிலம்பாலயா நிறுவன தலைவர் டாக்டர். செல்வக்குமார் மாணவர்களுக்கு கல்வி மற்றும் உடற்கல்வி பற்றிய விழிப்புணர்வு பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.
சமூக ஆர்வலர் சுதாகர் அரசின் நலத் திட்ட உதவிகள் பற்றி உரை நிகழ்த்தினார். முடிவில் தலைமை ஆசிரி யர் சசிகலா நன்றி தெரிவித்தார். விழாவில் திரளான பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.



