fbpx
Homeபிற செய்திகள்கண் தான விழிப்புணர்வை உருவாக்க அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்திய மனித சங்கிலி

கண் தான விழிப்புணர்வை உருவாக்க அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்திய மனித சங்கிலி

கண் தானத்தை வலியுறுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் இரு வார காலஅளவுக்கு தேசியளவில் நடத்தப்படும் 2022-ம் ஆண்டுக்கான நிகழ்வின் ஓர் அங்கமாக கண் தானம் பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் அதிகரிக்க, சென்னையின் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, எட்வர்டு எலியட்ஸ் கடற்கரையில் மனிதசங்கிலி நிகழ்வை நடத்தியது.

டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ்.சௌந்தரி, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகளின் குழுமத்தின் இயக்குநர் சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கல்லூரி மாணவர்கள், டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட 200-க்கும் அதிகமானோர் மனிதசங்கிலி நிகழ் வில் பங்கேற்றனர்.

கண்தானம் அளிப்பதற்கான உறுதிமொழி படிவத்தில் பலர் ஆர்வத்தோடு முன் வந்து ஒப்புதலை வழங்கி கையெழுத்திட்டனர்.

டாக்டர் அகர்வால்ஸ் கண் வங்கியின் மருத்துவ இயக்குனரும், முதுநிலை கருவிழிப்படல சிகிச்சை நிபுணருமான டாக்டர் பிரீத்தி பேசியதாவது:
கண்கள் தானம், நான்கு GøIN இழைம பார்வை இழப்புள்ள நபர்களுக்கு பார்வைத்திறனை வழங்கும் என்றாலும் கண்களின் தேவைக்கும் மற்றும் தானமளிக்கப்படும் கண்களின் தேவைக்குமிடையே மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது.

பார்வைத்திறனிழப்பை கட் டுப்படுத்துவதற்கான தேசிய செயல் திட்டத்தின்படி (NPCB) -ன் படி, உலகளவில் பார்வைத்திறன் பாதிப் புள்ள பொதுமக்களுள் மூன்று நபர்களுள் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்.

அதாவது, இந்தியாவில் மட்டும் ஏறக்குறைய 12 மில்லியன் நபர்கள் பார்வைத்திறனின்றி வாழ்கின்றனர். GøIN இழைம பார்வை இழப்பு என்பது, 50 வயதிற்கு குறைவான நோயாளிகளிடம் பார்வைத்திறனிழப்பிற்கான முக்கியக் காரணமாக இருக்கிறது.

பெரும்பாலான நேர்வுகளில் GøIN இழைம பார்வை இழப்பை கண்தானத்தின் வழி யாகப் பெறப்படும் கண்களைப் பொருத்துவதன் மூலம் சரிசெய்ய முடியும். கண் வங்கிச் சேவை மற்றும் கருவிழி மாற்றுப் பதியம் மீதான ஒரு உலகளாவிய சர்வேயின்படி கருவிழியை தானமாகப் பெற காத்திருக்கும் 70 நபர்களுக்கு தானமளிக்கும் ஒரேயொரு நபரின் கருவிழிதான் கிடைக்கப்பெறுகிறது.

தானமளிப்பவர்களிடமிருந்து பெறப் படும் கருவிழிக்கு மிகப்பெரிய தேவை உலகளவில் நிலவி வருவதை இந்த ஆய்வு தெரிவிக்கிறது என்றார்.

படிக்க வேண்டும்

spot_img