வாடிக்கையாளர்கள் தங்களது பணி ஓய்வுக்குப் பிறகு அவர்களின் வழக்கமான வருமானத் தே வைகளைப் பாதுகாத்துக் கொள்ளவும், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்பவும், உடனடி மற்றும் காலம் தாழ்ந்த வருடாந்திர தேர்வுகளை கொண்ட உத்தரவாதமுள்ள ஓய்வூதிய திட்டம்[Immediate and Deferred annuity options of Guaranteed Pension Plan] ஆகியவற்றை ஒருங்கிணைத்து, புதுமையான ஓய்வு கால தீர்வுகளை ஐசிஐசிஐ புரூடென்சியல் லைஃப் உருவாக்கியுள்ளது.
தற்போது வாழ்க்கையில் அன்றாட செலவு அதிகரித்து வருவதால் உண்டாகும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் உத்தரவாத முள்ள நிலையான வருமானத் தை வாடிக்கையாளர்கள் இந்த தீர்வின் மூலம் பெற இயலும்.
“உத்தரவாத ஓய்வூதிய திட்டம்”[‘Guaranteed Pension Plan’] என்பது உடனடி மற்றும் காலம் தாழ்ந்த வருடாந்திர விருப்ப தேர்வுகளை கொண்ட அருமையான வருடாந்திர ஓய்வூதிய திட்டமாகும். –
உடனடி வருடாந்திர திட்டத்தில் வாடிக்கையாளர்கள் அதை பெற்றவுடன் உத்தர வாதமுள்ள நிலையான வருமானத்தை உடனடியாக பெறத் தொடங்குகிறார்கள்.
ஐசிஐசிஐ புரூடென் ஷியல் லைஃப் இன்ஸ் சூரன்ஸ் கம்பெனி லிட் நிறுவனத்தின் தயாரிப்புகள் பிரிவின் தலைவர் பி. ஸ்ரீனிவாஸ் கூறுகையில், “கோவிட்-19ன் தாக்கம் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்திற்கு இதுவரையில்லாத பெரும் இடையூறை ஏற்படுத்தியது.
ஓய்வூதியத் திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம், நிதித் திட்டமிடலின் முக் கியத்துவம் குறித்து வாடிக்கையாளரை உணரச் செய்துள்ளது.
உத்தரவாத ஓய்வூதியத் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிலையான வருமானத்தை வழங்குகிறது.
உத்தரவாத ஓய்வூதிய திட்டம், “2021ம் ஆண்டின் சிறந்த தயாரிப்பு” [‘Product of the Year 2021’] என தேர்வு செய்யப்பட்டது, இது ஒரு வகையில் தயாரிப்பை பிரபலப் படுத்துவதற்கான வழியாக அமைந்திருந்தது” என்றார்.



