ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் உள்ளாட்சி அமைப்புகள் கூடுதல் சீர்திருத்தங்களுடன் அதிக உயிர்ப்பு கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டன.
இந்தியாவில் சில மாநிலங்களில் அது கூடுதல் அதிகாரங்களுடனும் நிதி ஆதாரத்துடனும் இன்று வரை இயங்கி கொண்டிருக்கின்றன.
மகாத்மா காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் அதிகம் வலியுறுத்தியதே உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அதிகாரங்கள் பரவலாக மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பதைத்தான்.
தமிழகத்தில் கடந்த ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடந்தாலும் முழுமையாக நடக்கவில்லை. தற்போது திமுக ஆட்சி அமைந்த பிறகு தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்துவதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இந்த தேர்தலை ஒரே கட்டமாக நடத்தச் சொல்லி நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறது அதிமுக. அதற்குள் சில கட்சிகள் கூட்டணியை மாற்றி இருக்கின்றன. தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருக்கின்றன.
தேர்தல் நடந்து முடிந்தால் தான் உள்ளாட்சி பிரதிநிதிகள் இயங்கி மக்களுக்கான குரலை எதிரொலிக்க முடியும். மக்களின் எளிய தேவைகள் செயல்வடிவம் பெறவும் முடியும்.
அதிலும் கொரோனா காலத்தில் வேகத்துடன் இயங்க வேண்டிய அவசியம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு இருக்கிறது.



