இந்தியாவின் முன்னணி இன்ஜின் ஆயில் பிராண்டான மொபில், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படமான ‘83’ உடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. இது இந்த கிறிஸ்துமஸ் தினத்தில் வெள்ளித்திரையில் வெளி வரவுள்ளது.
1983 உலகக் கோப்பைப் போட்டி முழுவதும், 14 உத்வேகம் பெற்ற வீரர்களின் பயணத்தையும், கபில்தேவின் தலைமையின் கீழ் பெற்றஇந்த வரலாற்று வெற்றியையும் இத்திரைப்படம் கண்முன்னே விரிக்கும்.
ரன்வீர்சிங் தனது பாத்திரமான கபில்தேவாகவே வாழ்ந்திருப்பதைக் காணலாம். இக்குழுவின் நடிகர்களாக தாஹிர்ராஜ் பாசின், ஜீவா, சாகிப்சலீம், ஜதின்சர்னா, சிராக்பாட்டீல், டிங்கர் ஷர்மா, நிஷாந்த்தஹியா, ஹார்டிசந்து, சாஹில்கட்டார், அம்மிவிர்க், ஆதிநாத் கோத்தாரே, தைரியாகர்வா, ஆர்பத்ரீ,பங்கஜ் திரிபாதி ஆகியோர் உள்ளனர்.
கபில்தேவின் மனைவி ரோமியாக தீபிகா படுகோனே முக்கிய வேடத்தில் நடிக் கிறார். எக்ஸான் மொபில் லூப்ரி கண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்-ன் சிஇஓ தீபாங்கர் பானர்ஜி கூறி யதாவது:‘83’திரைப்படத்துடன் இணைந்திருப்பதில் பெருமைப்படுகி றோம்.
எங்களின் ‘ஃபரக்லாகர் தேக்கியே’ எனும் பிரச்சாரத்தின் மூலம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் மொபில் வலுவான ஆதரவாளராக இருந்து வருகிறது.
1983-ல் இந்தியாவின் உலகக்கோப்பை வெற்றியானது, இந்திய கிரிக்கெட் மற்றும் விளையாட்டுக்கு மட்டுமின்றி, தேச நம்பிக்கைக்கும் உறுதிப்பாட்டுக்கும் ஒரு மட்டத்தில் மிகப் பெரும் வித்தியாசத்தை ஏற்படுத்தியது.
இந்த டிசம்பரில், இந்தியாவின் இந்த வெற்றியை மறுபடியும் கதையாகச் சொல்லிக் கொண்டாடுவோம் என்றார். ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிவிஆர் பிக்சர்ஸ், இந்த கிறிஸ் துமஸ்-ஐ ஒட்டிவரும் 24-ம் தேதி ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இத் திரைப்படத்தை வெளியிடுகிறது.
‘இன்ஜின் ஆயில்மொபில், படத்திற் கான அதிகாரப்பூர்வ பார்ட்னராக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
’83 இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு நேர்மறையான மாற்றத்தைக் கொண்டு வந்த அடையாளச் சின்னமான இந்த வெற்றியைக் கொண்டாடுகிறது,’ என்று ’83-இன் இயக்குனர் கபீர்கான் கூறினார்.



