சென்னையில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை முதல்வர் ஸ்டாலின் தினமும் பார்வையிட்டு வருகிறார். மாநகராட்சி அதிகாரிகளை அவர் முடுக்கி விட்டு மழைநீர் தேங்குவதை அகற்றும் பணிகளை வேகப்படுத்தி வருகிறார்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மீட்பு பணிகளுக்காக அரசு எந்திரம் முழு வீச்சில் இயங்குகிறது. வெள்ள பாதிப்பு மற்றும் உதவிகளுக்காக தொலைபேசி எண்கள் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னையில் கனமழையை கருத்தில் கொண்டே தீபாவளி விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பும் பயணத்தை தள்ளிவைக்குமாறு தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பொதுமக்களும் தங்கள் பயணத்தை தள்ளிவைத்தனர்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகளை உடனடியாக செய்திடவும் எம்பி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதல்வர் உத்தர விட்டுள்ளார்.
கனமழை ஒரு பக்கம் பயமுறுத்தினாலும், அரசு எந்திரம் நம்மோடு இருக்கிறது என்ற நம்பிக்கை பொதுமக்களுக்கு ஒரு உந்துசக்தியாய் உள்ளது. தமிழக அரசை பாராட்டுகிறோம்.



