நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த வாரம் ஜூலை 18ம் தேதியிலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இந்த நாடாளுமன்ற கூட்டத்தில் சத்தமில்லாமல் இந்திக்கு எதிராக புரட்சியை தென் மாநில எம்.பிக்கள் செய்து வருகின்றனர். இதற்கு முன் பெரும்பாலும் இந்தி தெரிந்த எம்.பிக்கள் தங்கள் வாதத்தை ஹிந்தியிலே பேசுவார்கள்.
இதற்கு ஆங்கிலம் தெரிந்த ஒன்றிய அமைச்சர்களும் இந்தியிலே பதிலளிப்பார்கள். ஆனால், இந்த முறை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற தென் மாநில எம்.பிக்களும் மேற்கு வங்க மாநில எம்.பிக்களும் தங்கள் வாதத்தை ஆங்கிலத்திலோ, அல்லது அவரவர் தாய் மொழியிலோ எடுத்துக்கூறி வருகின்றனர்.
விலைவாசி உயர்வு தொடர்பாக பேசிய திமுக எம்பி கனிமொழியும் காங்கிரஸ் எம்பி ஜோதி மணியும் தங்கள் வாதங்களை தமிழில் தான் முன்வைத்தனர்.
நாடாளுமன்ற விவாதங்கள் அனைத்தும் நேரடியாக ஒளிபரப்பப்படும் நிலையில், இது வரை மக்களுக்கு புரியாத இந்தியில் பேசி வந்த எம்.பிக்கள் ஆங்கிலத்தில் பேசுவது ஹிந்தி பேசாத மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
வழக்கம் போல இதற்கும் ஒன்றிய அமைச்சர்கள் இந்தியிலே பதில் சொல்வது மட்டும் மாறாமல் இருந்து வருகிறது. இந்த நிலையும் விரைவில் மாறும்.
இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக நடக்கும் இந்த மறைமுக போர் தென்மாநில மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது!



