fbpx
Homeபிற செய்திகள்ஆர்த்தா எனர்ஜி ரிசோர்சஸ் அறிமுகப்படுத்திய ரென்யூஷேர்

ஆர்த்தா எனர்ஜி ரிசோர்சஸ் அறிமுகப்படுத்திய ரென்யூஷேர்

இந்தியாவின் முன்னணி புதுப்பிக் கத்தக்க எரிசக்தி தீர்வு கள் வழங்குநரான ஆர்த்தா எனர்ஜி ரிசோர்சஸ் (AER), இன்று நாட்டில் ஆர்இ (RE) சொத்துக்களின் பகுதி உரிமையை ஏதுவாக்கிடும் வகையில், ரென்யூவபல் எனர்ஜி (RE) முதலீட்டு ஆன்லைன் தளமான ரென்யூஷேர்-ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது.

ஒரு தன்னாட்சி முதலீட்டு தளமாக தொடங்கப்பட்ட ரென்யூஷேர், இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஆர்இ பரிவின் ஒரு பகுதியாக இருக்கும்.

இந்த அறிமுகம் குறித்து, ரென்யூஷேரின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அனிமேஷ் தமானி கூறியதாவது: ரென்யூஷேர் அறிமுகத்தின் மூலம், பசுமை எரிசக்தியை ஏற்றுக்கொள்வதன் மூலம் சுற்றுச்சூழலில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துவதற்குக் கூடுதலாக, முதலீட்டாளர்கள் அதிக அளவில் சந்தைக்குள் நுழைய நாங்கள் உதவுவோம். ஆர்இ ஒரு ஈர்க்கக்கூடிய வளர்ச்சியைக் கொண்டிருந்தாலும், பெரும்பாலான முத லீட்டாளர்களுக்கு இந்தத் துறையில் சாத்தியமான முதலீட்டு வாய்ப்புகளுக்கான அணுகல் நடைமுறையில் இல்லை.

ஆர்இ பிரிவு சொந்தமாக மற்றும் சுயாதீனமாக நிர்வகிக்க மிகவும் விலையுயர்ந்த சொத்து வர்க்கம் என்ற ஒரு தவறான அபிப்ராயத்தைக் கொண்டுள்ளது.
இந்தப் பிரச்சனையைத் தீர்த்திடும் வகையில், முதலீடுகளுக்கான டிக்கெட் அளவை ஒரு ஒருங்கிணைப்பாளராகக் குறைப்பதன் மூலம் இந்த அபிப்ராயத்தை மாற்று வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

ரூ.10 கோடி என்னும் ஆரம்ப மொத்த முதலீட்டு அர்ப்பணிப்புடன், முதலீட் டாளர் வட்டத்தில் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது, இது ஆர்இ துறையில் மிகப்பெரிய ஆற்றல் மற்றும் ஆர் வத்தின் மீதான எங்கள் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது.

எனவே, 2024ம் நிதி யாண்டிற்குள் ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு மேற் பட்ட மதிப்புடைய பரிவர்த்தனைகளை மேற்கொள்வதை ஏதுவாக்குவோம்.
இந்திய ஓபிஇஎக்ஸ் (OPEX) திட்டங்களில் 10% ஐ கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

காலநிலை மாற்றத்தைத் தணிப்பதில் அதன் பங்களிப்பைச் சிறப்பித்துக் காட்டும் அதே வேளையில், விரும்பத்தக்க முதலீட்டு வழியாகத் துறையைத் தொடர்ந்து மேம்படுத்துவதற்கு சிறந்த உத்வேகத்தைப் பெற்றுள்ளோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img