fbpx
Homeபிற செய்திகள்‘ஆரோக்கியமான கல்லீரல், மகிழ்ச்சியான வாழ்க்கை’ கேஎம்சிஹெச் விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணி

‘ஆரோக்கியமான கல்லீரல், மகிழ்ச்சியான வாழ்க்கை’ கேஎம்சிஹெச் விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணி

உலக ஹெபடைடிஸ் தினம் ஜூலை 29-ம் தேதி அனு சரிக்கப்பட்டது. இதனை யொட்டி கல்லீரல் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, “ஆரோக்கியமான கல்லீரல், மகிழ்ச்சியான வாழ்க்கை” என்ற கருத்தில் நேற்று (ஜூலை 31) கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் வாக்கத்தான் பேரணி நடை பெற்றது.

ரேஸ்கோர்ஸ் சிஎஸ்ஐ மெட்ரிகுலேஷன் பள்ளியில் இருந்து துவங்கிய இப்பேர ணியை கோவை நகர காவல்துறை ஆணையர் வி. பாலகிருஷ்ணன் கொடிய சைத்து துவக்கிவைத்தார்.

கேஎம்சிஹெச் மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி முன்னிலை வகித்து பேசுகையில், இளைஞர்களிடம் குறிப்பாக பெண் களிடம் கல்லீரல் நோய் அதிகரித்து வருவது கவலைக்குரியது. ஆகஸ்ட் மாதம் முழுமையான கல்லீரல் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது.

அதில் கல்லீரல் பரிசோதனை, வைரஸ் ஹெபடைடிஸ் பரிசோதனை, அல்ட்ரா சவுண்ட், ஃபைப்ரோ ஸ்கேன் ஆகியவற்றை சலுகை கட்டணத்தில் பெற்று பலனடையலாம் என்றார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு ஹெபடைடிஸ் பி மற்றும் சி பரிசோதனைகள் செய்யப்பட்டன. தமிழகத்தின் மிகப்பெரும் கல்லீரல் மாற்று மையமாக விளங்கும் கேஎம்சிஹெச்-ல் கல் லீரல் நோய்களுக்காக சுமார் 6000 பேர் வெளி நோயாளிகளாகவும் 1000 பேர் உள் நோயாளிகளாகவும் ஆண்டுதோறும் சிகிச்சை பெறுகின்றனர்.

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாரி விஜயராகவன் பேசும்போது, உலகின் முன்னணி மருத்துவ மனைகளுடன் ஒப்பிடும் வகையில் கேஎம் சிஹெச் அதிநவீன வசதிகளுடன் கல்லீரல் சிகிச்சை அளிக்கிறது என்றார்.

கல்லீரல் மாற்றும் அறுவை சிகிச்சை செய்துகொண்ட மற்றும் கல்லீரல் நோய்க்கு சிகிச்சை பெற்று வருவோர் சுமார் 200 பேர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய கேஎம்சிஹெச் கல்லீரல் அறுவை சிகிச்சை குழுவினர், கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரி மாண வர்கள் மற்றும் பொதுமக்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img