ஆரம்ப நிலையிலேயே நோயறிதல் மற்றும் உரிய சிகிச்சை அளிக்கப்படுமானால், பெரும் பாலான கண் பிரச்சனைகள் மற்றும் பார்வை திறனிழப்புகள் வராமல் தடுக்க இயலும் என்று IIRSI 2022 கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசினார் நல வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன்.
இந்தியாவிலுள்ள கண் மருத்து வவியலாளர்களின் சங்கமான IIRSI – ன் இந்த இரு நாள் வருடாந்திர கருத்தரங்கு, நாடெங்கிலுமிருந்து 2500-க்கும் அதிகமான கண் மருத்துவவியல் நிபுணர்களும் மற்றும் வெளிநாடுகளிலிருந்து 200-க்கும் கூடுதலானோர் பங்கேற்றனர்.
நலவாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் கருத்தரங்கை தொ டங்கிவைத்து பேசியதாவது: இந்தியாவில் கண் கோளாறுகளும், பாதிப்புகளும் மிகப்பெரிய அளவில் காணப்படுகின்றன.
உலக சுகாதார நிறுவனத்தின்படி நம் நாட்டில் 12 பில்லியன் பார்வைத் திறனற்ற நபர்கள் இருப்பதாகவும் மற்றும் இவர்களுக்கும் கூடுதலாக 450 மில்லியன் நபர்களுக்கு பார்வை குறைபாடுகளை சரிசெய்யும் நிகழ்ச்சி தேவைப்படுவதாகவும் மதிப்பிடப்பட்டிருக்கிறது.
ஒரு மில்லியன் மக்கள் தொகையில் பார் வைத்திறன் பாதிப்புள்ள நபர்களின் எண்ணிக் கையைப் பொறுத்தவரை உலக ளவில் இந்தியா முதலிடம் வகிப்பது கவலைக்குரியது.
எனினும், ஆரம்ப நிலையிலேயே நோயறிதல் மற்றும் உரிய சிகிச்சை அளிக்கப்படுமானால், பெரும் பாலான கண் பிரச்சனைகள் மற்றும் பார்வை திறனிழப்புகள் வராமல் தடுக்க இயலும்.
அறிவியல் முன்னேற்றங்களின் பலன்கள் இந்நாட்டின் ஒவ் வொரு குடிமகனுக்கும் சென்ற டைய உதவுவதற்கு கண் பராமரிப்பிற்கான உட்கட்டமைப்பு வசதியை உருவாக்க தற்போதைய அளவைவிட பன்மடங்கு முதலீடு செய்வது அவசியமாகும்.
தென்னிந்தியா, குறிப்பாக தமிழ்நாடு மாநிலம் கண் மருத்துவவியல் உட்பட, உடல்நல பராமரிப்பிற்கான சிறப்புப் பிரிவு களில் எப்போதும் முதன்மை வகித்து வருகிறது.
கண் மருத்துவத்துறையில் திறன்கள் மற்றும் நவீன தொழில்நுட்பம் குறித்த அறிவோடு மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெற்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக பணியாற்றுகின்ற மருத்துவர்களை உருவாக்குகின்ற முதன்மையான கண் மருத்துவக்கல்வி நிறுவனங்கள் இம்மாநிலத்தில் பல இருக்கின்றன.
இந்திய கண் அறுவைசிகிச்சை மருத்துவர்களின் திறன்களை இன்னும் மேம்படுத்துவதில் IIRSI போன்ற கருத்தரங்குகள் ஒரு முக்கியப்பங்கை ஆற்றிவருகின்றன” என்றார்.
IIRSI – ன் தலைமை செயலரும் மற்றும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவருமான புரொஃபசர் அமர் அகர்வால் பேசும்போது, இந்தியாவில் நோயறிதல் செயல்பாடு மற்றும் சிகிச்சையில் கண் மருத்துவர்களின் திறன் களையும் சிறப்பான சிகிச்சை உத்திகளையும் கணிச மாக உயர்த்துவதில் IIRSI கருத்தரங்குகள் மிக முக்கியப் பங்காற்றியிருக்கின்றன என்றார்.
பேராசிரியர் டாக்டர் மஹிபால் எஸ். சச்தேவ், அகில இந்திய கண் மருத்துவவியல் சங்கத்தின் (AIOS) அறிவியல் குழு தலைவர் டாக்டர் லலித் வர்மா, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் கண் மருத்துவவியல் துறை பேராசிரியர் டாக்டர் நம்ரதா ஷர்மா, IIRSI – – ன் தலைவர் டாக்டர் ராகினி பரேக் உள்ளிட்டோர் இக்கருத்தரங் கில் கலந்துகொண்ட முக்கிய ஆளுமைகளுள் சிலர்.



