கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச முடி திருத்தம் சேவையை வழங்கியது கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள லாரா ஸ்டைல்ஸ் பிரிமீயம் யுனிசெக் சலூன்.
கோவை உக்கடம் பகுதியில் உள்ள தென்பாஸ்கோ அன்பு இல்லம் விடுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் உள்ளனர்.
முதல் தொடக்கமாக லாராவின் முடி திருத்த ஒப்பணையாளர்கள் முடி திருத்தம் செய்தனர்.
குழந்தைகளுக்கு இனிப்பு, காரம், தேவையான சோப்பு, நோட்டு, பென்சில், பேனா முதலிய எழுது பொருட்களையும் வழங்கினர். அவர்களிடையே விளையாட்டுப் போட்டி நடத்தி பரிசும் வழங்கினர்.
இந்த சேவை இனி வரும் நாட்களில் சரியான இடைவெளியில் தொடர்ந்து மீண்டும், மீண்டும் வழங்கப்படும் என இந்நிறுவனத்தினர் தெரிவித்தனர்.



