fbpx
Homeபிற செய்திகள்உதகையில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த தாமஸ் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் மெழுகுவர்த்தி ஆராதனை...

உதகையில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த தாமஸ் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் மெழுகுவர்த்தி ஆராதனை நிகழ்ச்சி

டிசம்பர் 25 நாடு முழுவதும் கிறிஸ்தவர் களால் கிறிஸ்துமஸ் பண் டிகை கோலாகலமாக கொண்டாடப்படும்.

கடந்த இரண்டு ஆண் டுகளாக கொரோனா காரணமாக வழிபாட்டுத் தலங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் ஆராதனைகள் வழிபாடுகள் எதுவும் நடைபெறாமல் இருந்தன.

தற்போது கொரோனா ஊரடங்கு தளர்வுகளில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் அரசு வழி நெறிமுறைகளின்படி நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக எதிர்வரும் 25ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த St.தாமஸ் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக மெழுகுவர்த்தி ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த ஆராதனை முழுமையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியின் இறுதியில் அனைவரும் தங்களது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை ஒரு வருக்கொருவர் தெரிவித் துக்கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img