உலகளாவிய புதுமைமிக்க ஸ்மார்ட் போன் பிராண்டாக திகழும் விவோ மிகுந்த செயல்திறன்மிக்க புதிய ‘டி மாடல்’ ‘ஸ்மார்ட்போன்களை’ அறிமுகம் செய்துள்ளது.
புதிய மாடல் டி1 5ஜி ஸ்மார்ட்போன் வரும் 9-ம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. இது அதிவேகத்துடன் பல பரிமாண செயல்திறனை கொண்டிருப்பதோடு இளம் தலைமுறையினரின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகை யில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது பிளிப்கார்ட் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ஆப்லைன் ஸ்டோர்களிலும் கிடைக்கும். அதிவேக இயங்குதளத்துடன் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், 20 ஆயிரம் ரூபாய் பிரிவில் மிக வேகமான மற்றும் மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும்.
வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போன் தொடர்பான பல்வேறு சிறப்பு அம்சங்கள் இதன் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட உள்ளன. எனவே வாடிக் கையாளர்கள் இதன் பேஸ்புக், டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இது குறித்து விவோ இந்தியாவின் பிராண்ட் ஆலோசனை பிரிவு இயக்குனர் யோகேந்திர ஸ்ரீராமுலா கூறுகையில், எங்களைப் பொறுத்தவரை வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இந்த புதிய ‘டி மாடல்’ ஸ்மார்ட்போன் இன்றைய தலைமுறையினருக்கு ஏற்ப அதிவேக செயல்திறனுடன் நவீன தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
எங்கள் தயாரிப்புகளை ஆன்லைன் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்காக, பிளிப்கார்ட் உடன் இணைந்து செயல் பட்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.



