fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின், அகமதிப் பீட்டுத் தரக் குழு (ஐ.கியூ.ஏ.சி.) சார்பில், “உயர் கல்வி நிறுவன ங்களின் தரத்தை மேம்படுத் துவதற்கான அணுகு முறைகள்” என்ற தலைப்பில் பேராசிரியர்களுக்கான 5 நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம், கல்லூரி கருத்தரங்கக் கூடத்தில் நேற்று (ஜூலை 25) தொடங்கியது.

கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல். சிவக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர், ஓமன் நிஸ்வா பல்கலைக்கழக டீன் முனைவர் ஆரோக்கியசாமி சூசை மாணிக்கம், உள்ளட க்கத் தகவல் குறுந்தகடு வெளியிட்டுப் பேசியதாவது:

பேராசிரியர்களுக்கான மேம்பாட்டு பயிற்சி என்பது மிகவும் முக்கியமானது. இப்பயிற்சி இங்கு மட்டுமல்லாது அனைத்து கல்வி நிறுவனங்களிலும் நடத்தப்பட வேண்டும். கற்பித்தலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மாணவர் களின் எண்ணம் அறிந்து செயல்பட வேண்டும்.

மாணவர்களிடம் கற்பித்தல் தொழில் நுட்ப த்தை கையாளுவதைக் காட்டி லும், கற்றலை மாணவர் களிடம் சேர்க்கும் தொழில் நுட்பத்தை அனைவரும் கையாள வேண்டும்.

அதுதான் கற்றலுக்கு கை கொடுக்கும். அதோடு, ஆசிரியர்கள், மாணவர்கள் இடையே நல்லுறவையும் ஏற்படுத்தும்.இவ்வாறு அவர் பேசினார்.

இதற்கான ஏற்ப £டுகளை அகமதிப்பீட்டுத் தரக் குழுவினர், கணிதத் துறைத் தலைவர் முனைவர் என்.உமா, பன்னாட்டு வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் ஐ.பர்வீன்பானு, பி.எஸ்.சி., சி.எஸ்.சி.எஸ். துறைத்தலைவர் முனைவர் வி.கிருஷ்ணப்பிரியா ஆகியோர் செய்துள்ளனர்.

பயிற்சி முகாமை வணிகவியல் துறைத் தலைவர் முனைவர் வி.நிர்மலா தேவி ஒருங்கி¬ ணத்து வருகிறார்.

படிக்க வேண்டும்

spot_img