வ.உ.சிதம்பரனாரின் 86வது குருபூஜையை முன்னிட்டு திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் கொடி ஏற்றப்பட்டது. பின்பு புதூர் பிரிவு, கோவில் வழி போன்ற பகுதிகளில் கொடி ஏற்றினர்.
இறுதியாக இடுவம்பா ளையம் அருகே இருக்கும் பாரப்பாளையம் நால்ரோடு சந்திப்பில் அலங்கரித்து வைக் கப்பட்டிருந்த வ.உ.சிதம்பரனார் திருவுருவப்படத் திற்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினர். இதையொட்டி 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் ராஜா
இந்த நிகழ்ச்சிக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் சீமான் ராஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் அன்பகம் திருப்பதி கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
மாவட்ட தலைவர் சுப்பு ராஜ், முருகேசன், மாவட்ட செயலாளர் அன்பரசன் உள்ளிட்ட பெருந்திரளான வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தினர் மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.